headlines

புதுப்புது இன்பம்!

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் 
  காதலால் தொட்டிட ஐம்பொறி நிறைந்தவள்-உடல்!
கண்ட நோய்க்கு மருந்துகள் உண்டிவள்
  காதல் நோய்க்கு மருந்தாய் இருந்தவள்!

மனைவியின் தோளைத் தழுவி உறங்குதல்
  மாலின் உலக மகிழ்வினும் சிறப்பு!-இங்கே
அணைப்பின் குளிர்வதும், நீங்கின் சுடுவதும்
  அதிசயம் தானே இவளுடை நெறுப்பு!

விரும்பிய பொருள்போல் இவளின் தோள்கள்
  விரைந்தே வந்துநல் இன்பம் கொடுக்கும்!-இவளைப்
பொருந்தும் போதெலாம் என்னுயிர் தழைக்கும்
  பேற்றினால் இவள்தோள் அமிழ்தாய் இனிக்கும்!

அழகிய இவளைத் தழுவிடும் இன்பம்
  அடுத்தவர் உண்ண அளித்து மகிழ்வது!-இவளைத்
தழுவும் போது காற்றும் நுழையா
  தந்திடும் இறுக்கம் இனிமை சூழ்வது!

காதலர் வாழ்வில் களிப்பை அளித்திடும் 
  கூடலும் ஊடலும் மாறிடும் காட்சி!-அவர்
காதல் மனைவியைக் கூடும் போதெலாம்
  காண்பார் சுவையின் புதுப்புது எழுச்சி

;